tamilnadu

img

பாஜக தலைவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.... சாலையில் பேனர் வைத்து பெண்களுக்கு அறிவுரை

லக்னோ:
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத் தின்போது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு, அதற்கான இழப்பீட்டை தராதவர்கள் இவர் கள்தான் என்று சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த சிலரின் புகைப் படங்களை உத்தரப்பிரதேச பாஜகஅரசு, பொது இடத்தில் பேனராக வைத்தது. இது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. இவ்விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம், தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது. அப்போது, “பேனர் விளம்பரம் மூலம், சொந்த மாநில மக்களையேஉத்தரப்பிரதேச அரசு அவமதித் துள்ளது, தனிநபர் சுதந்திரத்தை மீறி செயல்பட்டுள்ளது” என்றுகுற்றம் சாட்டியதுடன், பேனர்களைஅகற்றவேண்டும் எனவும் ஆதித்யநாத் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. 

ஆதித்யநாத் அரசோ, உச்ச நீதிமன்றத்திற்குப் போனது. ஆனால், அங்கு தான் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது, இதுபோன்ற பேனர்களை வைப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.இதனிடையே, ஆதித்யநாத் அரசுக்கு அதன் பாணியிலேயே பதிலடிகொடுக்க முடிவுசெய்த சிஏஏஎதிர்ப்பாளர்கள், இளம்பெண் களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாஜக முன்னாள்மத்திய அமைச்சர் சின்மயானந்தா, முன்னாள் எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் ஆகியோரின் புகைப் படங்கள் இடம்பெற்ற பேனரை பொது இடங்களில் வைத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

“இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். எனவே, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். இது பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;